கப்பல் பொறியாளரை மணந்தார் ஆத்மியா
ADDED : 1771 days ago
சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழில் அறிமுகமான ஆத்மியா, தற்போது சமுத்திர கனி ஜோடியாக வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் இரு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஆத்மியாவுக்கும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கப்பல் இன்ஜினீயர் சனூப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கண்ணூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் ஆத்மியா. இதற்கு சனூப்பும் சம்மதம் சொல்லிவிட்டார்.