முதல்வருடன் விவேக் திடீர் சந்திப்பு
ADDED : 1715 days ago
காமெடி நடிகர் விவேக் நேற்று தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினார். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். இதுகுறித்து விவேக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அரசியல் காரணங்களுக்காகவோ, எனது சொந்த காரணங்களுக்காகவோ முதல்வரை சந்திக்கவில்லை. தமிழ் துறவி அருட்பா தந்த வள்ளலார் தன் வாழ்க்கையில் 33 ஆண்டுகள் நடந்து சென்று வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். என்று கூறியிருக்கிறார்.
வருகிற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க அதிமுக முடிவு செய்திருக்கிறது. இதற்காக பல நடிகர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. நடிகர்களின் மார்கெட்டிற்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.