உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனின் புதிய படம் டான் : லைகா தயாரிக்கிறது

சிவகார்த்திகேயனின் புதிய படம் டான் : லைகா தயாரிக்கிறது

தற்போது டாக்டர், அயலான் என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுப்பற்றி உறுதியான தகவல் இல்லை. இந்தநிலையில் இன்று 11 மணி அளவில் லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்சனும் இணைந்து தயாரிக்கும் டான் என்ற படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, சிபி சக்ரவர்த்தி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

டான் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் கல்லூரி பின்னணி கொண்ட கதையில் உருவாக இருப்பதும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !