வைரலான அமிதாப் பச்சனின் சென்சார் மாஸ்க்
ADDED : 1713 days ago
நேற்று 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் அமிதாப் பச்சன் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை வீடியோ வாயிலாக தெரிவித்தார். அந்த சமயத்தில் அவர் புதிய வடிவிலான கருப்பு நிற சென்சார் மாஸ்க் ஒன்றை அணிந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
அவர் பேசுவதற்கேற்றபடி அந்த மாஸ்க்கில் இருக்கும் சிறிய எல்ஈடி பல்புகள் ஒளிர்ந்தது பார்ப்பதற்கே ஆச்சர்யமாக இருந்தது. கடைசியாக அவர் சிரித்தபோது கூட அதற்கேற்ப விளக்குகள் ஒளிர்ந்தன. அமிதாப் பச்சனின் இந்த மாஸ்க் சோஷியல் மீடியாவில் வைரலானதுடன், அவரது பேத்திகள் இருவரிடம் இருந்தும் அமிதாப்புக்குபாராட்டை பெற்று தந்துள்ளது.