தியேட்டர்களில் கூடுதல் இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி
ADDED : 1714 days ago
புதுடில்லி: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் வரும் பிப்.,28 ம் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் அவை கூறி இருப்பதாவது: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.