ராம் கோபால் வர்மாவின் டி கம்பனி
ADDED : 1752 days ago
ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப் பின்னணி, ஆபாசம் என பல்வேறு பின்புலங்களில் படங்களை கொடுக்கும் ராம் கோபால் வர்மா, தற்போது டி கம்பனி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் வாழ்க்கையை தழுவியது தான் இத்திரைப்படம். இப்படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி டிஜிட்டல் தளங்களில் வரவேற்பை பெற்றது. இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிட உள்ளார்.