அக்கா கணவரை புகழ்ந்த காஜல் அகர்வால் சகோதரி
ADDED : 1819 days ago
தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால். 6 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த இருவரும், 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் காஜல் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் காஜல் அகர்வாலின் சகோதரி நிஷா அகர்வாலிடம், காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சிலு உண்மையில் பணக்காரரா? என ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு நிஷா, அனைத்து வகையிலும் அவர் பணக்காரர் தான். அறிவில் மிகச்சிறந்த பணக்காரர். அதோடு அழகான இதயம் படைத்தவர், என கிச்சிலுவை பாராட்டி, நிஷா சாமர்த்தியமாக பதிலளித்துள்ளார்.