இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரன்ட்
ADDED : 1814 days ago
சென்னை: எந்திரன் கதை திருட்டு வழக்கில், இயக்குனர் ஷங்கருக்கு, எழும்பூர் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், 2010ல் ரஜினி நடித்த, எந்திரன் திரைப்படம் வெளியானது. நான் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி, இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து இயக்குனர் ஷங்கர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடியாகின.
இதையடுத்து, இந்த வழக்கு, 11 ஆண்டுகளுக்கு பின், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எழுத்தாளர்ஆரூர் தமிழ்நாடன் ஆஜரானார். ஆனால், இயக்குனர் ஷங்கர் ஆஜராக வில்லை. அவர் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.இதையடுத்து, எழும்பூர், இரண்டாவது மாஜிஸ்திரேட், இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார். மேலும், பிப்., 19 முதல் வழக்கு விசாரணை துவங்கும் எனஉத்தரவிட்டார்.