சொந்தக் குரலில் பேசும் ஜெகபதி பாபு
ADDED : 1707 days ago
தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவர் ஜெகபதி பாபு. சமீபகாலமாக தமிழில் அதிகப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பேசுகிறார்.
அது பற்றி, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் டப்பிங் பேசுவது உற்சாகமாக உள்ளது. டப்பிங் ஸ்டுடியோவிலிருந்து திரைக்குப் பின்னால்,” என டப்பிங் பேசும் வீடியோவையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லாபம்' படம் தியேட்டர்களில் வெளியாகுமா அல்லது ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்பது விரைவில் தெரிய வரும். தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.