கேரள முதல்வர் கையால் விருதுபெற்ற நிவின்பாலி
ADDED : 1707 days ago
கேரளாவை பொறுத்தவரை இன்னும் கொரோனா தாக்கத்தை சீரியஸாகவே அணுகி வருவதால் தியேட்டர்கள், திருவிழாக்கள், பொது கூட்டங்கள் என மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பதில் மிகுந்த கண்டிப்பு காட்டி வருகிறது. அதேசமயம் கேரள முதல்வரின் தலைமையிலேயே மலையாள திரையுலகின் 2020ஆம் வருடத்திற்கான கேரள அரசு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 50வது கேரள அரசு விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் பினராயி விஜயனே கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் மூத்தோன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருதை நடிகர் நிவின்பாலி பெற்றுக்கொண்டார்.