நாளை சுல்தான் டீசர் -ரிலீஸ்
ADDED : 1708 days ago
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன், அதையடுத்து இயக்கியுள்ள படம் சுல்தான். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார் -ராஷ்மிகா மந்தனா. 2019ல் தொடங்கிய இப்படம் கொரோனா நோய் தொற்று காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை. தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடக்கின்றன.
இந்நிலையில் தற்போது சுல்தான் படத்தை வெளியிட தயாராகி விட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு சுல்தான் படத்தின் டீசர் வெளியாவதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்றும் தெரிகிறது.