உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட சாணிக் காயிதம் போட்டோ

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட சாணிக் காயிதம் போட்டோ

தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களில் நடிக்கிறார். இதில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடிக்கும் சாணிக்காயிதம் படத்தைப் பற்றி தனது திரையுலக நண்பர்களிடம், இதுவரை நான் நடித்திராத ஒரு புதுமாதிரியான கதை. என்னை இந்தபடம் புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் என்று கூறி வருகிறார். இந்நிலையில், சாணிக்காயிதம் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு கறுப்பு வெள்ளை போட்டோவை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதோடு இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !