உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடவுள் துணையுடன் தீமையை வெல்வேன்: ராகினி பேட்டி

கடவுள் துணையுடன் தீமையை வெல்வேன்: ராகினி பேட்டி

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர் கன்னட நடிகை ராகினி திரிவேதி. 150 நாள் சிறைவாசத்திற்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு அமைதியாக இருந்த ராகினி தற்போது மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: எல்லா குடிமகன்களைப் போலவே என்னுடைய உரிமைகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். கடவுளின் ஆசிர்வாதத்தால், உதவியால் தீமையை வெல்வேன். என்னுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் குடும்பம், ரசிகர்கள் தான் எனது பலம். நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு ராகினி திவேதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !