கிரிக்கெட் வீரரை பிரமிக்க வைத்த சூர்யா
ADDED : 1708 days ago
சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை அனைவருமே புகழ்ந்து வரும் நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரஹானே, சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு சூர்யாவின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
இணையத்தில் ரசிகர் ஒருவர், சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது? என்று அவரிடத்தில் கேட்டபோது, சூரரைப்போற்று படம் என்றும், அப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளார். அதோடு, கிரிக்கெட் வீரர் அஸ்வின் சூரரைப்போற்று படத்தை பற்றி சொன்னதை அடுத்தே அப்படத்தை தான் பார்த்து மகிழ்ந்ததாகவும் ரஹானே தெரிவித்துள்ளார்.