செல்வராகவனை அசர வைத்த யுவன்!
ADDED : 1755 days ago
துள்ளுவதோ இளமை படத்தில் இணைந்த செல்வராகவன்-யுவன்சங்கர் ராஜா கூட்டணி தற்போது எட்டாவது முறையாக தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தில் இணைகிறார்கள். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தில் இணையப்போகிறார்கள்.
நானே வருவேன் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்களை செல்வராகவன் தேர்வு செய்து வரும் நிலையில், யுவன் சங்கர் ராஜாவோ அப்படத்திற்கான முதல் பாடலை கம்போஸ் செய்து விட்டார். சமீபத்தில் அந்த பாடலை செல்வராகவனிடம் அவர் போட்டு காண்பித்தபோது அசந்து போனாராம். அதையடுத்து ஓ மை காட், நானே வருவேனுக்கு என்ன ஒரு அருமையான பாடல்... என்று தனது வியப்பினை வெளிப்படுத்தியுள்ளார் செல்வராகவன். இதற்கு யுவன் நன்றி தெரிவித்துள்ளார்.