புலியைப் பார்த்து சூடு
ADDED : 1720 days ago
மற்றொரு நடிகையைப் பார்த்து பிரபல நடிகை எடுத்த முடிவு புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகி விட்டது. பொதுவாகவே திருமணமாகி விட்டால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய் விடும். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கிலும் திருமணத்திற்குப் பிறகு பிஸியாக நடித்து வருகிறார் திருமணமான நடிகை. இவரைப் பார்த்து பிரபல நடிகை ஒருவர் தானும் இதே போல் திருமணத்திற்குப் பிறகும் நடிக்கலாம் என ஆசைப்பட்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கிறதாம். ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுத்தால், புதுப்படம் எதுவும் இல்லையாம். நடிகைக்கு படவாய்ப்புகள் குறைந்ததற்கு திருமணம் மட்டுமல்ல, அவர் அதிகமாகக் கேட்கும் சம்பளமும் தான் காரணம் என்கிறார்கள் திரைவட்டத்தில்.