தெலுங்கு பட ரீமேக்கில் சந்தானம்
ADDED : 1705 days ago
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக தன்னை வளர்த்துக் கொண்டவர் சந்தானம். அவர் நடித்து வரும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகவில்லை என்றாலும், சந்தானத்தின் ஹீரோ மார்க்கெட் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் சுமாரான வெற்றியை பெற்று வருகின்றன.
அதன்காரணமாகவே தற்போது சந்தானத்தின் கைவசம் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், மன்னவன் வந்தானடி, சபாபதி என பல படங்கள் உள்ளன. இவற்றில் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் படங்கள் முடிந்து ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் சந்தானம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரியா சுமன் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்குகிறார்.