சுல்தான் டீசருக்கு எவ்வளவு வரவேற்பு?
ADDED : 1705 days ago
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் பிப்ரவரி 1-ந்தேதியான நேற்று மாலை வெளியானது. 24 மணிநேரத்தில் யு-டியூப்பில் இந்த டீசருக்கு 31 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், 2 லட்சம் லைக்ஸ்களும் கிடைத்தன. டீசரில் கார்த்தி சாட்டையை சுழற்றும் ஷாட் மரண மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சுல்தான் படம் ஏப்ரல் 2-ந்தேதி தியேட்டருக்கு வருவதாகவும் டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.