உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் யோகிபாபு

விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் யோகிபாபு

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 65ஆவது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், பூஜா ஹெக்டே நாயகியாகவும், அருண் விஜய் வில்லனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தற்போது யோகிபாபு விஜய் 65ஆவது படத்தில் இணைந்திருப்பதாகவும் இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஜய் நடித்த மெர்சல், சர்க்கார், பிகில் படங்களில் நடித்துள்ள யோகிபாபு, நான்காவது முறையாக விஜய்யுடன் இணையப்போகிறார்.

அதேபோல், நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒன்சைடாக காதலிக்கும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் யோகிபாபு. அந்த வகையில் இந்த படத்திலும் யோகிபாபுவிற்கு படம் முழுக்க விஜய்யுடன் பயணிக்கக்கூடிய ஒரு வேடம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !