டாக்டர் - டப்பிங்கை முடித்த சிவகார்த்திகேயன்
ADDED : 1705 days ago
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். அவருடன் பிரியங்கா மோகன், வினய், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற செல்லம்மா செல்லம்மா என்ற பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், டாக்டர் படத்திற்காக டப்பிங் பேசி முடித்துள்ள சிவகார்த்திகேயன், தான் டப்பிங் தியேட்டரில் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.