உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மான் போலீஸ் படத்தில் பாலிவுட் நாயகி

துல்கர் சல்மான் போலீஸ் படத்தில் பாலிவுட் நாயகி

கேரளாவில் எண்பதுகளில் பிரசித்தி பெற்ற கொள்ளையனான சுகுமார குறூப் என்பவனின் வாழ்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'குறூப்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள துல்கர் அந்தப்படத்தை முடித்து விட்டார். அதற்கு அடுத்த படத்தில் அப்படியே நேர்மாறாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான்.

சல்யூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இவர் தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல மும்பை போலீஸ் என்கிற சூப்பர்ஹிட் போலீஸ் படத்தையும் இயக்கியவர்.

குறூப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா என்பவர் நடித்துள்ளார். அதேபோல சல்யூட் படத்திலும் பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடிக்க இருக்கிறாராம். இவர் லக்னோ சென்ட்ரல், தி ஸ்டோரி ஆப் பொக்ரான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !