கவுதம் மேனனுக்கு ஜோடியாக அமலாபால்
ஆடை படத்தில் ஆடையே இல்லாத வேடத்தில் நடித்தபோது ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தன்னை வாரி அணைத்துக் கொள்ளும் என்றுதான் எதிர்பார்த்தார் அமலாபால். ஆனால் அந்த படமே அவரது சினிமா மார்க்கெட்டிற்கு வேட்டு வைத்து விட்டது. அதையடுத்து விஜய் சேதுபதியுடன் நடிக்கயிருந்த ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்டார் அமலாபால். அதன்பிறகு ஓரிரு படங்களில் கமிட்டான போதும் அந்த படங்களும் கிடப்பில் கிடக்கின்றன. தற்போது வெப்சீரிஸ் மற்றும் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் நடித்துள்ள பகுதியில் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, அதிதி பாலன், வருண், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 4 கதைகள் கொண்ட இதை கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி இயக்கி உள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 12-ல் தியேட்டரில் வெளியாகிறது.