ஹிப் ஹாப் ஆதியின் 'சிவக்குமாரின் சபதம்'
இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் ஹிட் கொடுத்து வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இதுவரை அவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதோடு அப்படத்தின் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகி விடுகின்றன.
நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஸ்வின் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ஆதி. சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் ஆதி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ள அப்படத்தினை ஹிப் ஹாப் ஆதியே இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு சிவகுமாரின் சபதம் என தலைப்பு வைத்திருப்பதாகத் தெரிகிறது.
மார்ச் மாதத்தில் சிவகுமாரின் சபதத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.