உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆதிபுரூஷ் படப்பிடிப்பில் தீவிபத்து: அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

ஆதிபுரூஷ் படப்பிடிப்பில் தீவிபத்து: அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ஆதிபுருஷ். ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் சமூக படம். இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைப் அலி கான் ராவணனாகவும் நடிக்கிறார்கள். ஓம் ராவத் இயக்குகிறார்.

இந்நிலையில் நேற்று முதல் ஆதிபுருஷ் படப்பிடிப்பு தொடங்குவதாகப் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகர் பிரபாஸும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதிபுரூஷ் ஆரம்பம் எனப் பதிவிட்டிருந்தார். படம் 2022, ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கெத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.

படப்பிடிற்காக மும்பை அருகே உள்ள கொரேகாவ், மேற்கு பாங்கூர் நகரில் பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டிருந்தது. நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த ஷெட்டுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 8 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸ், சைப் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு தீயணைப்பு வீரர் தவிர வேறு யாருக்கும் காயம் இல்லை.

இதுகுறித்து பாங்கூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் நாள் படப்பிடிப்பிலேயே தீவிபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது படக் குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !