உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்திடமே வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்

அஜித்திடமே வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் டைரக்சனில் வலிமை என்கிற படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப்படத்தையும் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்கிறார். அதேசமயம் வலிமை படம் குறித்த அப்டேட் தகவல்கள் எதையும் தயாரிப்பாளர் போனி கபூர் தருவதே இல்லை என அஜித் ரசிகர்கள் வருத்தம் கலந்த கோபத்தை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில் அஜித், இந்தியா முழுதும் சுமார் பத்தாயிரம் கிமீ தூரம் பைக்கிலேயே பயணம் செய்து ஐதராபாத்தை வந்தடைந்துள்ளார். அப்படி பயணம் செய்த சமயத்தில் பல ரசிகர்கள் அவரை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர். இன்னொரு ரசிகர் ஒருபடி மேலே போய், அஜித்திடமே வலிமை அப்டே குறித்து கேட்டும் விட்டார். அதற்கு அஜித் சிரித்துக்கொண்டே, “வெகு விரைவில்” என பதில் அளித்ததாக கூறியுள்ளார் அந்த ரசிகர். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !