உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாழ்த்திய சூரியை கலாய்த்த சிவகார்த்திகேயன்

வாழ்த்திய சூரியை கலாய்த்த சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி டான் படத்தில் இணையப்போகிறது. இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனியின் பெயருடன் சூரியின் பெயரும் இடம் பெற்றது.

அதையடுத்து, டான் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சூரி, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் திரையை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் சந்திப்போம் நண்பா -என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சூரிக்கு ஒரு பதில் டுவீட் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில், ''நண்பா... பஸ்ட் டுவீட்ட ஒழுங்கா படிங்க. அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்'' என்று அவரை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார். பதிலுக்கு சூரி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஒரு நகைச்சுவை காட்சியை பதிலாக கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !