படகில் உடற்பயிற்சி செய்த ரெஜினா
ADDED : 1707 days ago
அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என பல படங்களில் நடித்துள்ள ரெஜினா, தற்போது கசடதபற, பார்ட்டி, ஜிந்தாபாத் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு ஏரியில் நிற்கும் சிறு படகின் மீது நின்றபடி உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரெஜினா. இதை கண்டு பலரும் அவரது திறமையை ஒருபுறம் பாராட்டினாலும், சிலர் கலாய்க்கவும் செய்கின்றனர்.