அசோக் செல்வனின் புதிய படம்
ADDED : 1706 days ago
சினிமா விநியோக துறையில் இருந்த ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் படத்தை அறிமுக இருக்குனர் விஷால் வெங்கட் இயக்குகிறார். இவர் இயக்குனர் மதுமிதாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரியா, ரித்விகா, அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, அபி ஹாசன், மணிகண்டன், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா, நாசர், அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விஷால் வெங்கட் கூறியதாவது: இந்த படம் வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு கதாபாத்திரங்களின் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையாக உருவாக்கபட்டு இருக்கிறது. இரண்டு நாட்களில் நடக்கும் இந்த கதை, மனித மனத்தின் உள்ளார்ந்த உணர்ச்சிகளை பற்றி பேசும் என்கிறார்.