ஆர்யாவின் சகோதரிக்கு ரூ.32 கோடி பரிசு
ADDED : 1705 days ago
நடிகர் ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கும் சார்ப்பட்டா பரம்பரை, எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆர்யாவின் சகோதரி தஸ்லிமா என்பவர் கணவர், பிள்ளைகளுடன் கத்தாரில் வசித்து வருகிறர்ர. அந்த நாட்டில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டை ஜனவரி 26-ந்தேதி வாங்கிய தஸ்லீமாவுக்கு முதல் பரிசாக இந்திய மதிப்பில் ரூ. 32 கோடி பரிசு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து ஆர்யா தரப்பு எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும் அந்த செய்தியை மறுக்கவில்லை.