பிரியா வாரியரின் தெலுங்கு பட டீசரும் வரவேற்பு பெற்றது
ADDED : 1789 days ago
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் டிரைலர் வெளியானபோது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் பிரியா வாரியர். அந்த டிரைலரில் அவர் கண் சிமிட்டுவது போன்று நடித்திருந்த ஷாட் இளசுகளை சுண்டி இழுத்தது. ஆனபோதும் அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து செக் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரியா வாரியர். இந்த படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிதினுக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடித்துள்ள இப்படம் சிறையில் நடக்கும் காதல் கதையில் உருவாகியுள்ளது. இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் செக் படம் தனக்கு முதல் வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறார் பிரியா வாரியர்,.