உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் வலிமை குழு

ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் வலிமை குழு

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். அவருடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.

வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்பெயினில் ஒரு ஸ்டைலிஷான பைக்கை வைத்து நடக்கும் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த காட்சி தான் அப்படத்தின் க்ளைமாக்ஸ் பைட் சீன் என்றும் சொல்லப்படுகிறது. இதற்காக வலிமை படக்குழு விரைவில் ஸ்பெயின் நாட்டிற்கு பறக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !