மறுஜென்மம் தந்த உணர்வு - ராய்லட்சுமி
ADDED : 1756 days ago
நடிகை ராய் லட்சமி சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டார். இவர் அளித்த பேட்டி : கொரோனா நிறைய பாடம் கற்று தந்துள்ளது. மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவுவதும் அதிகமாகி உள்ளது. சினிமா மட்டுமல்லாது எல்லா துறையை சேர்ந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணர வைத்துள்ளது. நாம் எதையெல்லாம் மறந்தோமோ அதையெல்லாம் திருப்பி தந்துள்ளது. எல்லாவற்றையும் விட ஏதோ மறு ஜென்மம் எடுத்த உணர்வையும், உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என மகிழ்ச்சியடைய செய்யும்படி இந்த கொரோனா செய்திருக்கிறது என்றார்.