தாத்தா வேடத்தில் நெப்போலியன்
ADDED : 1703 days ago
புதுநெல்லு புதுநாத்து படத்தில் அறிமுகமான நெப்போலியன் அதன்பிறகு ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் அரசியலிலும் ஒரு ரவுண்டு வந்தவர், அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். ஆனபோதும் அவ்வப்போது தமிழ் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர், இப்போது அப்பா மாதிரியான குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் அன்பறிவு என்ற படத்தில் தாத்தா வேடத்தில் நெப்போலியன் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மூன்று தலைமுறை தொடர்புடைய மதுரை கதைக்களக்களத்தில் இப்படம் தயாராகிறது. ஆதிக்கு ஜோடியாக காஷ்மிரா நடிக்கிறார். இவர்களுடன் சாய்குமார், விதார்த், சங்கீதா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அஸ்வின்ராம் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.