ஆலியா பட் வெளியிட்ட பிகினி படங்கள்
ADDED : 1784 days ago
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், தற்போது ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சீதை வேடத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தான் நடித்துள்ள படங்களில் பிகினி உடையில் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை ஆலியாபட்.
ஆனால் தற்போது தனது பாய்பிரண்ட் ஆகன்ஷா ரஞ்சன் கபூர் என்பவருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஆலியாபட், அங்குள்ள கடற்கரையில் பிகினி உடையணிந்து தான் அமர்ந்திருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தெறிக்க விட்டுள்ளார். இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து ஆலியாபட்டின் சோசியல் மீடியா பக்கம் கடும் டிராபிக் ஜாமில் சிக்கித்தவித்து வருகிறது.