ஒரே படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள்
ADDED : 1702 days ago
குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் சூர்யா. இதை புதியவர் சரவ் சண்முகம் இயக்குகிறார். அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் முக்கிய வேடத்தில் நடிக்க அவரது அப்பாவாக அருண் விஜய்யே நடிக்கிறார். இப்போது நடிகர் விஜயகுமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார். ஊட்டியில் மொத்த படப்பிடிப்பும் நடக்க உள்ளது. விரைவில் படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளனர்.
''ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எனது படத்தில் நடிப்பது மகிழ்ச்சி'' என்கிறார் சரவ்.