பெப்சிக்கு மீண்டும் செல்வமணி தலைவர்
ADDED : 1702 days ago
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 2021 - 23ம் ஆண்டுக்கான தேர்தல் பிப்., 14ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 22 யூனியன்கள் உடைய இவ்வமைப்பின் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலர் உள்ளிட்ட 13 பதவிகளுக்கு தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் தலைவராக ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளராக அங்கமுத்து சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் உள்ளிட்ட 13 பேரும் போட்டியின்றி தேர்வாகினர். இதன்மூலம் செல்வமணி மூன்றாவது முறையாக பெப்சியின் தலைவராகி உள்ளார். விரைவில் இவர்கள் பதவியேற்க உள்ளனர்.