உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலும், காமெடியும் கலந்த 'டைட்டானிக்'

காதலும், காமெடியும் கலந்த 'டைட்டானிக்'

பல படங்களை தயாரித்த சி.வி.குமார் தயாரித்துள்ள படம் 'டைட்டானிக்' (காதலும் கவுந்து போகும்). கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி, 'ஜாங்கிரி' மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி, சுதா ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். ஜானகிராமன் இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு மற்ற பணிகள் முடிந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !