மார்ச்சில் 'நெஞ்சம் மறப்பதில்லை'
ADDED : 1702 days ago
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. சஸ்பென்ஸ், திரில்லர் பின்னணியில் உருவான இப்படம் முடிந்து, நிதி பிரச்னையால் பல ஆண்டுகளாக வெளியாகாமல் முடங்கி இருந்தது. இப்போது படத்தை வெளியிடும் பணிகள் நடக்கின்றன. முதலில் ஓடிடியில் வெளியிடலாம் என எண்ணினர். இப்போது தியேட்டர்கள் 100 சதவீதம் இயங்குவதால் அடுத்த மாதம் தியேட்டரில் வெளியிட உள்ளனர்.