உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் 100 கூட்டணி

மீண்டும் 100 கூட்டணி

''100'' படத்தில் இணைந்த இயக்குனர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். இணையவழி குற்றங்கள் தான் இப்படத்தின் பின்னணி கதைக்களம். அதன் உடன் அப்பா - மகன் இடையேயான பாசப்பிணைப்பையும் மையப்படுத்தி ஆக்சன், திரில்லர் கலந்து உருவாக்கின்றனர். நாயகி உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹிந்தியில் 40 படங்களை தயாரித்த பிரமோட் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்தவர்த்தி, சுருதி நல்லப்பா இணைந்து இதை தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !