வெற்றிக்கு காத்திருக்கும் மதுரை மீனாட்சி
ADDED : 1708 days ago
மதுரையை சேர்ந்தவர் மீனாட்சி கோவிந்தராஜன். இயக்குனர் பாரதிராவின் நெருங்கிய நண்பர் தான் கோவிந்தராஜன். பாரதிராஜாவின் சிபாரிசின் பேரில் சுசீந்திரன் இயக்கிய கென்னடி கிளப் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். மீனாட்சியின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் வரவேற்பை பெறவில்லை.
தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர ஜெய் ஜோடியாக சிவ சிவ படத்தில் நடித்து வருகிறார். அழகும், திறமையும் இருந்தும் சரியான வெற்றி அமையாததால் மீனாட்சியின் பயணம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார் மீனாட்சி. அதனை கோப்ரா படம் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.