உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டப்பிங் கலைஞர் புகாரில் இயக்குனர் கைது

டப்பிங் கலைஞர் புகாரில் இயக்குனர் கைது

கேரளாவில் பெண்களுக்கு எதிராக பேசி வந்த விஜய் பி.நாயர் என்பவர் மீது கருப்பு மை வீசி புகழ் பெற்றவர் பாக்யலட்சுமி. மலையாள சினிமாவின் முன்னணி டப்பிங் கலைஞர். 300க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். பெண்கள் அமைப்பில் பங்கேற்று வரும் சமூக செயற்பாட்டாளார்.

இந்நிலையில் பாக்கியலட்சுமி பற்றி, மலையாள திரைப்பட இயக்குனர் சந்திவிளா தினேஷ் அவதூறு கருத்துகளைக் கூறி யூடியூப்பில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாக்கியலட்சுமி, போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்து எச்சரித்து அனுப்பினர்.
தற்போது அவர் மீண்டும் அவதூறு கருத்துகளை வெளியிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசிலும், முதலமைச்சரிடமும் பாக்யலட்சுமி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், இயக்குனர் சந்திவிளா தினேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !