போயஸ் கார்டனில் தனுஷ் புது வீடு : பூமி பூஜையில் ரஜினி பங்கேற்பு
நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் புது வீடு கட்டுகிறார். இதற்கான பூமி பூஜையில் ரஜினி பங்கேற்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். ஜகமே தந்திரம், கர்ணன் படங்களை முடித்துவிட்டவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படம், துரை செந்தில் குமார் இயக்கும் படம் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதுதவிர ஹிந்தியிலும், ஹாலிவுட்டிலும் படம் பண்ணுகிறார்.
தனுஷின் மாமனாரான நடிகர் ரஜினி, போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த பகுதியிலேயே தனுஷும் ஒரு நிலம் வாங்கி உள்ளார். இங்கு தனது கனவு வீட்டை கட்டுகிறார். இதற்கான பூமி பூஜை இன்று(பிப்., 10) நடந்தது. இதில் தனுஷ், மனைவி ஐஸ்வர்யா மகன்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், லதா ஆகியோரும் பங்கேற்றனர். தனுஷின் தந்தை, இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் பங்கேற்றார். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைலராகின. பலரும் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலக் குறைவால் ஓய்வில் இருந்து வந்த ரஜினி, இப்போது வெளியே வந்துள்ளார். விரைவில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைத் தொடர்ந்து தனுஷும் போயஸ் கார்டனில் குடியேற உள்ளார்.