முதன்முறையாக ராம்சரணுக்கு ஜோடியான பூஜா ஹெக்டே
ADDED : 1697 days ago
சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, இன்னொரு முக்கிய வேடத்தில் அவரது மகன் ராம் சரண் நடிக்கிறார். இதையடுத்து ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்த நிலையில் தற்போது அப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார் பூஜா ஹெக்டே.
தற்போதைய தெலுங்கு சினிமாவின் முன்னணி நடி கைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, இதற்கு முன்பு ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதையடுத்து இப்போது ஆச்சார்யா படம் மூலம் முதன் முறையாக அவருக்கு ஜோடியாகியிருக்கிறார். கொரட்டல்லா சிவா இயக்கி வரும் இப்படம் மே மாதம் 3-ந்தேதி திரைக்கு வருகிறது.