ஹீரோவானார் திண்டுக்கல் லியோனி மகன்
ADDED : 1742 days ago
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி. தற்போது திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். கங்கா கவுரி என்ற படத்தில் நடித்தார் லியோனி. அதன்பிறகு அவர் நடிக்கவில்லை. தற்போது அவரது மகன் லியோ சிவகுமார், 'அழகிய கண்ணே' என்ற படத்தில் ஹீரோவாகிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த விஜயகுமார் இயக்குகிறார். ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். நேற்று படத்தின் பூஜை நடந்தது, வருகிற 15ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.