தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார்
நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தாய் கிழவி. சிவகுமார் முருகேசன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் சிங்கம் புலி, பால சரவணன், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். உசிலம்பட்டி கிராமத்தில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார் 75 வயது மூதாட்டி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் பிப்ரவரி 20ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த தாய்க்கிழவி படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி உரிமையை ஜியோ ஹாட் ஸ்டாரும் பெற்றுள்ளதாக எஸ்.கே. புரொடக்சன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.