உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 200 மில்லியனைக் கடந்த சிவகார்த்திகேயனின் 'வாயாடி பெத்த புள்ள'

200 மில்லியனைக் கடந்த சிவகார்த்திகேயனின் 'வாயாடி பெத்த புள்ள'

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் 'கனா'.

இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 'வாயடி பெத்த புள்ள' பாடல் அதிக வரவேற்பைப் பெற்றது. சிவகார்த்திகேயன் தன் மகள் ஆராதனாவுடன் இணைந்து பாடியதே அதற்குக் காரணம். ஜிகேபி எழுதிய அப்பாடலை வைக்கம் விஜயலட்சுமியும் இணைந்து பாடியுள்ளார்.

யு டியுபில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான அதன் லிரிக் வீடியோ தற்போது 200 மில்லியனைக் கடந்துள்ளது. தமிழ் சினிமா பாடல்களில் 200 மில்லியனைக் கடந்த மூன்றாவது பாடல் இது. 'ரவுடி பேபி' பாடல் 1000 மில்லியன்களைக் கடந்து முதலிடத்திலும், 'ஒய் திஸ் கொலவெறி' 267 மில்லியன்களைக் கடந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இப்படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான 'ஒத்தையடிப் பாதையிலே' பாடல் ஏற்கெனவே 100 மில்லியன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது மகளுடன் இணைந்து பாடிய பாடல் 200 மில்லியனைக் கடந்துள்ளதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !