பிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1695 days ago
சாஹோ படத்தை அடுத்து ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கப்பட்ட பணிகள் நடந்து வருகிறது.
இப்படத்தின் ரிலீஸ் தேதி காதலர் தினத்தன்று அறிவிக்கப்படும் என்று படத்தை தயாரிக்கும் யுவி கிரியேசன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், ஜூலை 30-ந்தேதி படம் திரைக்கு வர இருப்பதாக இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு படத்திற்கான சின்ன புரொமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.