உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்.,9ல் கர்ணன் ரிலீஸ் : பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஏப்.,9ல் கர்ணன் ரிலீஸ் : பர்ஸ்ட் லுக் வெளியீடு

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கியுள் படம் கர்ணன். தனுஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட தனக்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டு ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ்.

இந்நிலையில் நேற்றைய தினம் கர்ணன் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.தாணு, நாளை(இன்று) 11 மணிக்கு கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதேபோல் இன்று கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள அவர், வருகிற ஏப்ரல் 9-ந்தேதி படம் திரைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக்கில் தனுஷ் முகம் மற்றும் கைகளில் ரத்தத்துடன் கைதாகி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !