ரீமேக் படங்களுக்கு எதிரானவள்
ADDED : 1742 days ago
தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார்.
தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாளத்தில் இருந்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஏன் பெறுவதில்லை என்பது பற்றி பேசியிருக்கிறார் மஞ்சிமா மோகன்.
அதில், “ரீமேக் படங்களுக்கு எதிரானவள் நான். சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். படங்களுக்கு மொழி, களம் என அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். மலையாளப் படத்தை மலையாளத்திலும், தமிழ் படத்தை தமிழிலும், தெலுங்குப் படத்தை தெலுங்கிலும் தான் பார்க்க வேண்டும்.
வெற்றியடையும் படங்களை ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை. என மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
மஞ்சிமா மோகன் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் ரீமேக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.