உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் படப்பிடிப்பு தள்ளி வைப்பு!

தனுஷ் படப்பிடிப்பு தள்ளி வைப்பு!

ஜகமே தந்திரம், கர்ணன் படங்களைத் தொடர்ந்து தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த நிலையில், அவரது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடிக்கயிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

தமன்னா நாயகியாக நடிக்கவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் இரண்டு மாதங்கள் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நானே வருவேன் படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டார் செல்வராகவன். அதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.தாணு தயாரிக்கும் நானே வருவேன் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !